ஸ்ரீமதி விதுஷா கோபி கிருஷ்ணாவின் நெறியாழ்கையில் அண்மையில் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற விரலிசை நாத வந்தனம் -2024 ,கலை நிகழ்வின் பிரதமவிருந்தினர் உரையின் போது யாழ்,பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழின் தொன்மையான நரம்புக்கருவியின் படிமலர்ச்சியாய் வாய்த்தது வீணை;இசையின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் தெளிவடையவும் ஏதுவானது ;வீணயின் பயில்வு என்பது ஒரு தவம் போன்றது. மிகுந்த அர்ப்பணிப்பான குருவின் வழிகாட்டலும் அதே அர்ப்பணிப்பான பிள்ளைகளின் ஈடுபாடும் சங்கமமாகின்ற போதே வீணையின் நாதம் இதயத்தைத் தொடுகின்றது .இத்தகைய ஒரு அனுபவத்தை விரலிசை நாதவந்தனம் எமதாக்கியது; சுருதி – லயம் பிசகாத பக்குவம் ; நேர்த்தியான மேடையமைப்பு; நேர முகாமைத்துவம் .
இந் நிகழ்வின் நேறியாளர், மாணவர், இவர்களை இப்பயில்வில் ஈடுபடுத்தும் பெற்றோர் ஆகியோரின் பண்பாட்டு உணர்திறன் பாராட்டுக்குரியது என்றார்.
திரு நெல்வேலி முத்துமாரி ஆலய சிவஸ்ரீ கிருபாகர குருக்கள் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையை திருமதி அனற் ஜேன் தவசீலன் நிகழ்த்தினார், சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு கு, ரஜீவனும்,சமுதாய மருத்துவ நிபுணர் திருமகள் சிவசங்கரும் கலந்து சிறப்பித்தனர். கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களை பிரதம விருந்தினர் பேராசிரியர் சண்முகலிங்கன், ,திருமதி கௌரி சண்முகலிங்கன் , சிறப்புவிருந்தினர் ஆகியோர் வழங்கினர். நிறைவாக விருந்தினர், சாகித்தியா வீணாலயா இயக்குநர் விதுஷா கோபி கிருஷ்ணா கௌரவிப்பு இடம் பெற்றது.