20
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், இலங்கைத் தமிழ் நாடக அரங்க ஆளுமையாளருமான ‘ஏ.சீ.தாசீசியஸ்’ குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு எதிர்வரும் 23ஆம் நாளன்று இடம்பெறவுள்ளது.
இந்தியத் தேசிய விருது பெற்ற ஆவணத் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் கலை விமர்சகருமான
திரு. அம்ஷன் குமார் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘ஏ.சீ.தாசீசியஸ்’ குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு, 23.10.2024, காலை 9 மணிக்கு, கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் நிகழும் இந்த ஆவணப்படத் திரையிடலில், கருத்துரைகளை, துறையின் மேனாள் தலைவர்களான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்,
பேராசிரியர் துரை.மனோகரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
ஏற்புரையினை, நிகழ்வில் நேரடியாகக் கலந்து சிறப்பிக்கும் திரைப்பட இயக்குநர் திரு. அம்ஷன் குமார் அவர்கள் நிகழ்த்துவார். அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் அறிவித்துள்ளனர்.