தெவிட்டாத தேடல்களும்
தேன் சிந்தும் சிணுங்கல்களும்
சிணுங்கலுடன் சேர்ந்த சீண்டல்களும்
செல்களினூடே ஊடுருவி சென்றது
நிமிடங்களை தள்ளிச் செல்லும்
கடிகார முட்கள்
உதடுகளை உரசிச் செல்லும் மெல்லிய முத்தங்கள்
கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும்
அள்ளிச் செல்லும் பொற்கால
பொழுதுகள்
காதோர கம்மல்களை உரசியே உறவாடுகிறது
இராப்பொழுதின் தேன் சிந்தித்தும் இம்சைகளை
தாங்கியபடி கனாவில் கலை பயிலும்
காதல் ஓவியம்
நெஞ்சிக்குழி வாங்கும் பெருமூச்சும்
இருவர் காதில் காதலாய் கசிந்திடும்
ஓயாத காதலாய் ஒழியாமல் தேன் குடிக்கும்
காதோரம் காதல் பேசும்
நிமிடங்கள்…
கேசுதன்