செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பறத்தலே கார்த்திகைக் கனவு | த. செல்வா

பறத்தலே கார்த்திகைக் கனவு | த. செல்வா

1 minutes read

இந்துப் பெருவெளி எங்கும் வெள்ளிநிலா வாண்ணங்கொண்டெம் சுதந்திர வேட்கை பற்றிப் பாடிச் சபிக்கிறது அவர்களை

நட்சத்திர நாயகர்களின் செங்குருதி படிந்திட்ட நிலமெங்கும் பூக்கள் புரட்சிக் கீதங்களை இறைக்கிறது

ஒப்பற்ற திவலைகள் நெஞ்சுகள் நதியாய் நந்திக்கடலாகி ஆரவாரிக்கிறது

ஒரு விடுதலை தேசத்தில் அடையுண்ட கனவு கார்த்திகை தேசத்தில் கண்திறக்கிறது

நிலம் பிளந்தெழும் விதையாகி ஈழவர் உளம் பிழந்து எழும் எண்ணத் திராவகத்தில் மிதக்கிறது இலட்சியப் படகு

காலம் பயிர் சரிவது கதிரெறிந்து நிமிரவேயென இடைவெளிகள் புதுவெளியாக

மாவீரத்தின் மூச்சில்க் கலந்து தேசக்காற்றில் பறக்கிறது நினைவின் பறவை

இந்த மண்ணின் மாசற்ற மாந்தரை நினைத்து சுடரும் கார்த்திகைத்தீயில்
சத்திய எண்ணையை ஊற்றுவோம் இலட்சம் சிறகு வெட்டுண்டாலும் பறத்தலே கார்த்திகைக் கனவென

காலை 5.30
த.செல்வா
திருநகர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More