0
முங்கியும் முங்காமலும்
தலை அமுங்க
இரத்தக் குளத்தில்
மல்லாந்து கிடக்கும் அவன்
மேகம் கசிய
நீர் சிதற்றும் வானம்
ஈரக்காற்று கனியவைப்பது
இயற்கையை மட்டுமா..?
ஏன் இளக்கவில்லை..?
மனிதர்களை…
மெளன சாட்சிகள் விழித்திருக்கும்
அத்துவான சூழல்
பசியாலும் பட்டினியாலும்
களைத்துக் கசங்கித் தளராத அவனை
பிடித்தமுக்கி
கத்தியால் சல்லடை செய்தனர்
எச்சில் சோற்றில்
தழைத்து எக்காளமிடும் அவர்கள்…
முளைத்தெழும் விதையாய்
கம்பீரமும் உறுதியும் ததும்ப
போராடிய வாழ்க்கை
அவன் முகத்தில் ஒளிர்ந்தது.
🦀
வசந்ததீபன்