2
சாத்தானின் உருவத்தை வரைகிறான்
ஓவியத்தின் கோடுகள்
தீப்பிடித்து எரிகின்றன
உதிரும் மலர்களின் கேவல்கள்
அம்புபட்டு குருதி சிந்தியபடி
றக்கைகளை உதறி உதறித் துள்ளும் பறவையின் கீச்சொலி
பிரளய ஓசை எழுப்பும் நதியின்
பேரிரைச்சல்
வானமும் பூமியும் இடத்தை மாற்றி
சுழன்று சுழன்று பிரபஞ்சத்தின் ஊடாக
பூவின் மகரந்தப் பீடமாகையில்
புராதன ஆயுதங்களோடு
பிரசன்னமாகிறார் கடவுள்
அப்பூவின் மத்தியில்
சாத்தானா? கடவுளா?
குழப்பத்தில் ஓவியன்
மயங்கிச் சரிகிறான்.
வசந்ததீபன் கவிதைகள்