(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அருண் பள்ளிச் சீருடை அணிந்து எனக்காக வாசலில் கரத்திருந்தாள். நான் அவனை பள்ளியில் விட்டு விட்டு அலுவலகம் போக வேண்டும். அவசரம் அவசரமாக புறப்பட்டு கொண்டிருந்தேன்.
வழக்கமான பல்லவியை ஆரம்பித்தாள் என் மனைவி மீனா. “அப்பாடி இந்த சின்ன வயசிலேயே இந்த பெண்ணுக்கு இந்த கர்வம் கூடாது” என்றாள். உடனே நான் “என்ன விஷயம்” என்று கேட்டேன். “எதிர் வீட்டு சுமி கான்வெண்டுக்கு காரிலேயே போகிறாள். நம் அருணையும் உங்கள் பழைய ஸ்கூட்டரையும் கேவலமாக பார்த்துக் கொண்டே போகிறாள் என்ன திமிர் அவளுக்கு” என்றாள்.
தினமும் தான் அருணை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு செல்லும் போது எதிர் வீட்டு பெண் சுமி காரில் இருந்தே பார்க்கும். அன்று ஒரு விசேஷத்திற்காக என் மனைவி மீனாவை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன், என் மகன் உடல் நலம் சரியில்லாததால் பள்ளிக்கு போகவில்லை. அப்பொழுது “அங்கின் அங்கிள் என்னை ஸ்கூல்ல டிராப் பண்ணுகிறீர்களா? எங்கள் வீட்டு கார் ரிப்பேர். ரிக்க்ஷாவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினாள் சுமி.
என் மனைவியின் முகம் சிறுத்தது. இருந்தாலும் நாள் சுமியை ஸ்கூட்டரில் முன் பக்கத்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினேன். வழியெல்லாம் சுமி ஹாரனை அழுத்தி அந்த சந்தத்தை அனுபவித்துக் கொண்டு வந்தாள்.
திருப்பங்களில் கை காட்டி சைகை செய்து கொண்டு வந்தாள். பள்ளி வத்ததும் “தேங்ய்யூ அங்கிள்” என்று எனக்கு டாடா காண்பித்துவிட்டு தன் நண்பர்களை அழைத்து, “இன்று நான் அந்த அங்கிளுடன் ஸ்கூட்டரில் ஜாலியாக வந்தேன்” என்று குதூகலித்தாள்.
நானும், என் மனைவியும் மீனாவின் முகத்தை பார்த்தோம். உடனே மீனா “அடப்பாவமே ஸ்கூட்டரில் போக வேண்டும் என்று இந்தப் பெண் எவ்வளவு ஆசைப்பட்டிருக்கிறாள். அதனால் தான் நம் ஸ்கூட்டரை தினமும் பார்த்து கொண்டு சென்றாளா? நான்தான் இவளை தவறாக நினைத்துக் கொண்டேன்” என்று கூறினாள். நான் அதற்கு “அடி பைத்தியமே! குழந்தைகள் குழந்தைகளாக தான் இருக்கிறார்கள். நாம் தான் மற்றவர்களைப் பார்த்து பொறாமை படுகிறோம்” என்று சொல்ல மனைவியும் அதை ஆமோதித்து தலை ஆட்டினாள்.