உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், 20 முதல் 25 கிராம் உப்பை உணவில் சேர்த்து கொள்கிறோம்.
காரம் மிகுதி உணவில் அதை சமப்படுத்த உப்பை சேர்க்கின்றனர். கருவாடு, காயவைத்த இறைச்சி, ஊறுகாய், வற்றல்கள், அப்பளம் போன்ற பொருடகள், புளிக்குழம்பு, மீன்குழம்பு போன்ற குழம்பு வகைகளிலும் சிப்ஸ், காரவகை சிற்றுண்டிகளிலும் அளவிற்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படுகிறது.
சோடியம் குளோரைடு எனப்படும் உப்பில் 40 சதவீதம் சோடியம் எனப்படும் ரசாயனப்பொருள் உள்ளது. இந்த சோடியம் உடலில் தங்குவதனால் சிறுநீரகமும், இதயமும் பெரிதும் இடர்பட நேரிடும். மேலும் இந்த உப்பு ரத்த அழுத்தத்தை பெரிதும் உயர்த்தும்.
வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, உடலிலுள்ள நீர்ச்சத்தெல்லாம் வற்றிப் போனவர்களுக்கு இளநீர் கொடுக்கலாம்.
அதே இளநீரை, சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுத்தால், அவர்கள் உயிருக்கே ஆபத்தாகலாம். இரண்டுக்கும் ஒரே காரணம்தான் உப்பு
உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும்.
உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். இதனால் லோ பிபி எனப்படுகிற குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.
ஊறுகாய், சிப்ஸ், வற்றல், வடாம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இவற்றில் எல்லாம் உப்பின் அளவு தேவையைவிட அதிகமாகவே சேர்க்கப்படுவதால் தவிர்ப்பது சிறந்தது.
இயற்கை உணவுகளான காய்கள், பழங்கள், விதைகளை உணவில் ஒரு பகுதியாக சேர்த்து கொண்டால் உடல் நலம் சீர்படும்.
இயற்கை உணவில் சோடியம் மிகவும் குறைவாகவே உள்ளது. பதிலாக பொட்டாஷியம் மிகுதியாக இருக்கிறது. உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கின்ற திறனும் பொட்டாஷியத்திற்கு உண்டு