செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பெண்கள கைகளில் உள்ள சதையை குறைக்க இந்த உடற்பயிற்சி!

பெண்கள கைகளில் உள்ள சதையை குறைக்க இந்த உடற்பயிற்சி!

2 minutes read

ஆண்கள் பெரும்பாலும் தங்களுடைய கைகளில் அதிகப்படியான தசைகள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக பலவகையான உடற்பயிற்சிகளையும் செய்வார்கள். ஆனால் பெண்கள் தங்களுடைய கைகளில் அதிகப்படியான சதை தொங்குவதை விரும்புவது இல்லை. பெண்களுடைய கைகளில் அதிகப்படியான சதை தொங்கினால் அவர்களுடைய உடலமைப்பை கெடுத்துவிடும் என்பதற்காக பெண்கள் இதனை விரும்புவதில்லை. எனவே பெண்களின் கைகளில் உள்ள சதையை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பயிற்சி: 1
இப்போது கால்களை சற்று அகல விரித்து நில்லுங்கள். இப்போது இரண்டு கைகளையும் உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். ஒரு முறை பக்கவாட்டில் அங்கிருந்து ஆரம்பித்து உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். உங்களுக்கு நேராக கைகளை கொண்டு வரும் போது கைகள் மேலும் கீழுமாக கடந்து செல்ல வேண்டும். அதாவது கத்திரிக்கோல் போல. அதாவது கைகளை எக்ஸ் வடிவத்தில் கொண்டு வந்து மீண்டும் பக்கவாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். கைகளை நன்றாக கொண்டு செல்ல பழகி விட்டால் கால்களையும் கொண்டு செல்லலாம்.

பயிற்சி: 2 standing arm circles

அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ள போகின்ற பயிற்சி standing arm circles பயிற்சி. இந்த பயிற்சி செய்வதற்கு முதலில் நேராக எழுந்து நிக்க வேண்டும். பிறகு தங்கள் கால்களை சற்று விரித்து வைக்க வேண்டும். பின் தங்களுடைய இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நோக்கி தூக்க வேண்டும். பின் கீழ் நோக்கி இடுப்பு கீழ் இறக்க வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்துவர வேண்டும்.

பயிற்சி: 3 wall push ups

அடுத்ததாக செய்யக்கூடிய பயிற்சி wall push ups. இந்த பயிற்சி வழக்கமான புஷ் அப் போலத்தான் இருக்கும். ஆனால் இந்த பயிற்சியை சுவற்றில் செய்ய வேண்டும்.

அதாவது தங்களுடைய இருகைகளையும் நேராக நீட்டி சுவற்றில் உள்ளங்கை படும் படி வைக்க வேண்டும். இப்பொழுது தங்கள் கைகளை அழுத்தி புஷ் அப் செய்திடுங்கள், அதாவது சாதாரணமாக சுவற்றில் தங்கள் கைகளை ஊன்றி புஷ் அப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் மிக விரைவில் தங்கள் கைகளில் உள்ள சதைகள் குறைய ஆரம்பிக்கும்.

பயிற்சி: 4 standing arm circles

கைகளில் உள்ள சதையை குறைக்க இந்த பயிற்சியை செய்யலாம் அதாவது நேராக நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் இரண்டு பாதங்களுக்கு நடுவில் சின்ன இடைவேளி இருக்கட்டும். இரண்டு கைகளையும் அகல விரித்து இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் ரொடேட் செய்ய வேண்டும். அப்படி ரொடேட் செய்யும் போது உள்ளங்கை கீழ் நோக்கியிருக்க வேண்டும். முதல் 20 ரவுண்ட் ஒரு பக்கமும் அடுத்த 20 ரவுண்ட் அதற்கு ஆப்போசிட் சைட் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர தங்கள் கைகளில் உள்ள சதைகள் குறைய ஆரம்பிக்கும்.

பயிற்சி: 5 plank exercise

இந்த பயிற்சியனை ஆங்கிலத்தில் பிளாங்க் (plank exercise) என்று கூறுவார்கள். நம் உடலை பிளாங்க் செய்வதற்கான தோற்றத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் இரு உள்ளங்கைகளையும் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். கால்களின் நுனி விரலையும் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மலை ஏற்றத்தை போன்று தோற்றத்தில் நாம் நின்று கொள்ள வேண்டும். நம்முடைய வயிறு உடலில் உள்ள வேறு எந்த பகுதியும் தரையில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இருகாலும் உள்ளங்கை மட்டுமே தரையில் இருக்க வேண்டும். நேராக இருப்பது மிகவும் அவசியம். கையை மடக்க கூடாது. காலையும் மடக்க கூடாது. இப்படி முடிந்தவரை அதிகபட்சமாக ஒரு 30 நொடிகள் வரை செய்ய வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More