நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த முருங்கை நெல்லிக்காய் பானம் உதவியாக இருக்கும். இந்த கொரோனா காலத்தை கடக்க நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தை சமாளிக்க இதுபோன்sற இயற்கை பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.
கொரோனாவை எதிர்த்து போராட மக்கள் பயந்து வரும் சூழலில் அதிலிருந்து தப்பிக்க நிறைய முயற்சிகளையும் மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த கொரோனா இரண்டாவது அலை பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதனால் நிறைய உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து வந்தாலும் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அவர்கள் முயன்று வருகின்றனர்.
இந்த நேரத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தி தான் பல்வேறு நோய்களுக்கு எதிராக செயல்படும். நம்முடைய நோயெதிர்ப்பு செல்கள் கொரோனாவிடம் சண்டையிட்டு நம் உடலை காப்பாற்றும்.
அந்த வகையில் பார்க்கும் போது நெல்லிக்காய் மற்றும் முருங்கை இலை இரண்டுமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. இதில் அதிகளவு விட்டமின் சி இருப்பதே முக்கிய காரணமாகும். நீங்கள் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால் இந்த பானத்தை நீங்கள் காலை வேளையில் குடித்து வரலாம்.
நன்றி -தமிழ் நியூஸ்