செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

3 minutes read

மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும் என்ற கருத்தில் பலரும் இப்பொழுதெல்லாம் தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கின்றனர். ஆனாலும் சர்வதேச அளவில் ஐந்து வயது குழந்தைகளில் ஒரு கோடி குழந்தைகள் வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன. ஆகவே அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது.

பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதே சிறந்தது. அதற்கு அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டும் காரணம் அல்ல, தாய்ப்பால் புகட்டுவதில் தாய்க்கும் நன்மை உண்டு. ஆறு மாதம் வரையில் குழந்தைக்கு தேவையான வைட்டமின் மற்றும் சத்துகளோடு, குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்பாலிலேயே அதிகம் இருக்கிறது.

ஆகவே இப்போது தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எவ்வளவு நல்லது என்று பார்ப்போம்.

சந்தோஷத்தைக் கொடுக்கும்

தாய்ப்பால் புகட்டுவது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை மறந்து, குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது.

பழைய நிலையை அடைய உதவும்

கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக் காலத்தில் கருப்பையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பேற்றிற்கு பின் கருப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய தாய்ப்பால் உதவுகிறது.

இரத்த இழப்பை சரிசெய்யும்

தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து, அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

மாதவிடாயை தாமதப்படுத்தும்

தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. அதாவது பெண்களின் கருப்பையில் அண்டம் உருவாவதை தாமதிக்கிறது.

உளவியல் ரீதியான பிணைப்பு

தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும்.

சுயமரியாதை அதிகமாகும்

தாய்ப்பால் கொடுப்பதால், அது தாயிடத்தில் சுய மரியாதையை ஊக்குவிக்கிறது.

எளிமையான வேலை

தாய்ப்பால் புகட்டுவதால் உணவு வழங்கும் உபகரணங்களை கழுவி, சுத்தப்படுத்தி, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எளிய உணவு

தாய்ப்பால் மிகவும் சிக்கனமானதும் கூட. எப்படியெனில் செயற்கையாக ஆரோக்கிய உணவுகள் புகட்ட முற்படுதல் அதிக செலவை ஏற்படுத்தும். மேலும் அது சராசரி குடும்ப செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவு பிடிக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

தாய்ப்பால் புகட்டுவது மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

எடை குறைய உதவும்

தாய்ப்பால் குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்கள் உடலில் எடை இழக்கவும் உதவுகிறது.

நன்றி | boldsky

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More