செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மனம் விட்டு அழுவதற்கு அறை

மனம் விட்டு அழுவதற்கு அறை

1 minutes read

மனம் விட்டு பேச யாருமில்லை என்ற கவலையை போக்க அழுகை அறை (CRYING ROOM) என்ற முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ விசித்தரமான பிரச்சனைகள் வருவதுண்டு. ஆனால் அவை எதிர்கொள்ள பலர் தயாராக இல்லை என்பதும், மனரீதியாக பாதிக்கப்படுவதும் உண்டு.

இது போன்ற செயற்கை முறை வாழ்க்கையால் மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது மட்டுமன்றி மன இறுக்கம், சோர்வு, மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

இதைப்போக்க மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக அழுகை அறை என்ற ஒரு அறையை உருவாக்கி அவர்களை அறையில் அடைத்து தான் விரும்பும் நபரை தொடர்பு கொண்டு கண்ணீர் விட்டு பேச வைப்பதால் மன இறுக்கம் உள்ளிட்ட உளவியல் ரீதியான பிரச்சனைகள் குறைவதாக மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஸ்பெயின் நாட்டில் அழுகை அறை என்ற அறையை உருவாக்கியுள்ளனர். மனம் விட்டு பேச ஆளில்லையே என்ற கவலையில் உள்ளவர்கள் இந்த அறையை உருவாக்கியுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனியாக 116 மில்லியன் டொலர் செலவில் மனநலப் பாதுகாப்பு இயக்கத்தை அறிவித்தார், அதில் 24 மணி நேர தற்கொலை உதவி சேவை போன்ற சேவைகளும் அடங்கும்.

“இது ஒரு தடை அல்ல, இது ஒரு பொது சுகாதார பிரச்சனை, நாம் பேச வேண்டும், தெரியப்படுத்த வேண்டும், செயல்பட வேண்டும்,” என  அவர் மனநல நோய் பற்றிதெரிவிதார்.

2019 ஆம் ஆண்டில், ஸ்பெயினில் 3,671 பேர் தற்கொலை காரணமாக மரணித்துள்ளனர். இது இயற்கை காரணங்களுக்குப் பிறகு இரண்டாவது பொதுவான மரணமாகும்.

அரசாங்கத் தரவுகளின்படி, 10 இளைஞர்களில் ஒருவர் மனநலக் கோளாறுடன் இருப்பதாகவும், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 5.8% பேர் கவலையால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More