அடிமுதுகு வலி வந்தால் சிறுநீரகம், சிறுநீரகப்பைக்கு சக்தி ஓட்டம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். நாம் முதுகுத்தண்டை திடப்படுத்த முத்திரைகள் செய்தால் அதை சார்ந்த உள் உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
மனிதனின் ஆரோக்கியம் அவனது முதுகு தண்டை சார்ந்துள்ளது. முதுகுத் தண்டுவடத்திற்கும் உடலின் உள் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
அடிமுதுகு – கோனாடு சுரப்பியை சார்ந்தது. அடிமுதுகு வலி வந்தால் சிறுநீரகம், சிறுநீரகப்பைக்கு சக்தி ஓட்டம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
நடுமுதுகு வலி வந்தால் சிறுகுடல், பெருங்குடல் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம்.
கழுத்து முதுகுவலி வந்தால் நுரையீரல், இதயம் சரியாக இயங்கவில்லை. அப்பகுதியில் சக்தி ஓட்டம் குறைவு என்று அர்த்தம்.
எனவே நாம் முதுகுத்தண்டை திடப்படுத்த முத்திரைகள் செய்தால் அதை சார்ந்த உள் உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
அனுசாசன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியா தவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். ஒரு பத்து வினாடிகள். பின் கண்களை திறக்கவும்.
சுண்டுவிரல், மோதிர விரல் நடுவிரலை உள்ளங்கைக்குள் மடக்கி கட்டை விரலை மோதிர விரலில் படும்படி வெளியில் வைக்கவும். ஆள்காட்டி விரல் படத்தில் உள்ளதுபோல் நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களில் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.
எப்பொழுதும் நிமிர்ந்து உட்கார கற்றுக் கொள்ளவும். அதிக காரம், புளிப்பு, உப்பு தவிர்த்து சாத்வீகமான உணவை எடுக்கவும்.
நன்றி | மாலை மலர்