சூரிய நமஸ்காரம்:
சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 ஆசனங்களைக் கொண்டது. வேலை காரணமாக காலையில் யோகா செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தையாவது தினமும் செய்யுங்கள்.
இந்த சூர்ய நமஸ்காரத்தைச் செய்வதால் நுரையீரலின் செயல்பாடுகள் மேம்படுகிறது.
டயபெட்டீஸ் வருதற்கான காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுபெறச் செய்கிறது.
ஹைபர் டென்ஷன் ஆகாமல் இருக்க உதவுகிறது. பெப்டிக் அல்சர் வருவதைத் தடுக்கிறது.
சியாடிகா எனும் கீழ் முதுகு வலி, மூட்டு வலி ஆகியவற்றை தடுக்கிறது.
மாதவிடாய் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இதனைச் செய்ய வேண்டாம்.
மூச்சுப் பயிற்சி:
இந்த மூச்சுப் பயிற்சியை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். தினமும் 10 நிமிடங்களாவது இதில் குறிப்பிட்டதுபோல மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் மனது ஒருநிலை அடையும். தேவை இல்லாத தவறான எண்ணங்கள் தோன்றுவதைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்படைவதோடு, நீங்கள் செய்யும் வேலையில் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும் கோவம், பயம், பதட்டம் அனைத்தையும் குறைத்து மனதை அமைதிப்படுத்த நிச்சயம் இந்த மூச்சுப்பயிற்சி உதவும். மாடிப்படிகட்டுகளில் ஏறினால் மூச்சு வாங்குகிறதா, கண்டிப்பாக இதனை முயற்சி செய்து பாருங்கள். மூச்சுவாங்குவது கண்டிப்பாகக் குறையும்.
உடல் எடைக் குறைய: சலபாசனம்
பெண்கள் அவசியம் செய்ய: புஜங்காசனம் (கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்கவும்)
தலைவலி போக்க: சஷங்காசனம்
முதுகு, கால்களுக்கு வலு சேர்க்க: வஜ்ராசனம்
இடுப்புச் சதையைக் குறைக்க உதவ: வக்ராசனம்