காய்கறி சாலட்டுகள் நல்லது தான். ஆனால் அதை மதிய வேளையில் உணவிற்கு மாற்றாக உண்ணக்கூடாது.
மேலும் சாலட்டுகளில் புரோட்டீன் இல்லை. உடலுக்கு போதுமான புரோட்டீன் கிடைக்காவிட்டால்,
அதன் விளைவாக புரோட்டீன் பற்றாக்குறை ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
பல வகையான பழங்களை ஒன்றாக கலந்து சாப்பிடுவதை ஆயுர்வேதம் பரிந்துரைப்பதில்லை.
மாறாக தனித்தனியாக சாப்பிடவே ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பழத்திற்கும் தனித்தனி புளிப்புச் சுவையுண்டு.
இந்த புளிப்புக்களை ஒன்றாக கலந்து சாப்பிட்டால், அது வயிற்றில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
மேலும் ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விகிதத்தில் செரிமானமாகின்றன.
நீங்கள் வயிற்று உப்புசத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், பழ சாலட்டுகளை சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது.