முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர்.
உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர்.
வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதயக் கோளாறு, எலும்பு பலம் குறைதல், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி, மன அழுத்தம் போன்றவைகளால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் எலும்பு பலம் குறைதல் போன்ற பிரச்சினைகளால் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
மொத்தத்தில் முதுமைப் பருவம் ஒரு திரிசங்கு போல! ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேரான அனுபவங்கள். சில சுகமான அனுபவங்களும், சில சுமையான அனுபவங்களும் உள்ளன.
மொத்தத்தில் கிடைத்தற்கரிய இம்மானிடப் பிறவியை நன்கு அனுபவித்து வாழ வேண்டும். நாமும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் சற்றேனும் உபயோகத்தோடு வாழ வேண்டும்.
அதற்கு உடல் நலமும், மன நலமும் நன்றாக இருக்க வேண்டும். அது சாத்தியமா? வாழ்க்கையில் மறுபடியும் வசந்தம் வருமா? முதுமைக்கு குட்பை சொல்ல முடியுமா? பலருக்கு முதுமைப் பருவம் ஒரு திரிசங்கு நிலையாகத்தான் அமைந்து விடுகிறது.