புதினா, ஓர் அருமருந்தாகும். பல நோய்களுக்கு புதினா மூலிகை தீர்வாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“வயிற்று வலி, வயிறு உப்புசம், செரிமான கோளாறு என அனைத்துக்கும் சிறந்த மூலிகை உணவு புதினா. புதினாவைப் பயன்படுத்துவதினால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கச் செய்து பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கக் கூடியது.
“பெண்களின் மாதவிடாய் காலகட்டத்தில் உணவில் சேர்த்து உண்டால் மிகுந்த பயன் தரும். வயிறு சம்பந்தமான அனைத்து விதமான தொந்தரவுகளுக்கு தீர்வு தரக்கூடியதாகும்” என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
மேலும் எவ்வகையான நோய்களுக்கு புதினா மருந்தாகின்றது என்று இங்கு காணலாம்
வயிற்றுப் புழு – புதினாவை உண்பதால் வயிற்றுப் புழு அழிக்கப்படுகிறது.
வாய்வுத் தொல்லை – வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் புதினாவை தினசரி உணவில் சேர்ப்பதினால் அதில் இருந்து விடுபடுவார்கள்.
தலைவலி – அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்களுக்கு புதினா இலையை அரைத்து தலையில் பூசி வருவதால் தலைவலி ஏற்படாமல் தடுக்க முடியும்.
ஆஸ்துமா – மூச்சுப் பிரச்சினை உள்ளவர்கள் இதை உண்பதினால் ஆஸ்துமா மற்றும் மூச்சுக் கோளாறுகளிலிருந்து விடை பெறலாம்.
நரம்பு தளர்ச்சி – வாத நோய், சோகைத் தன்மை, நரம்பு தளர்ச்சி போன்ற சிக்கலான நோய்களிலிருந்தும் காப்பாற்றக் கூடியது.
பல் வலி – நீண்ட நாட்களாக பல் வலியால் அவதிப்படுபவர்கள் புதினாக் கீரையை நன்றாக மென்று சாப்பிடுவதினால் ஈறுகளில் உள்ள கிருமிகளை அழித்து, பற்களை வலுப்பெறச் செய்யும்.