ஆஸ்துமா என்றால் என்ன என்பது பற்றி அனைவருக்கும் சரியான விளக்கம் வேண்டும் இப்படி விளக்கத்தை பெரும் போது தான் ஒருவரால் நோய் நிலை ஏற்படும் போது அதற்கு சரியான சிகிச்சைகளை நோக்கி செல்ல முடியும்.
இந்த ஆஸ்துமா நோய் நிலை என்பது ஒருவருக்கு பரம்பரை மரபு ரீதியாக ஏற்படக்கூடியது. இதன் தோற்றுவாயை நாம் பல விதமாக அவதானிக்கலாம். சிலருக்கு சிறிய காலத்தில் இருந்து தோன்றி இருக்கலாம் . சிலர் இந்த நோய் நிலையை இடைப்பட்ட காலத்தில் இருந்து தோன்றியிருக்கும் . சிலருக்கு சிறிய வயதில் தோன்றி இடையில் மறைந்திருக்கும் .இப்படி நிறைய வேறுபாடு உண்டு.
ஆஸ்துமாவை மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை நிலை என்று சுருக்கமாக விளக்கலாம்
இருமல் , மூச்சு எடுக்க கடினம் , சத்தம் கேட்டல் , நெஞ்சை இருக்குதல் அறிகுறி ஆகும். வெளியில் இருந்து வரும் தூசி துணிக்கைகளை ஓவர் ரியாக்ட் உடன் உடல் எதிர் கொள்ளும் நிலையே ஆஸ்துமா,வெளியில் இருந்து எது வந்தாலும் அதை தடுத்து எதிர்வினையை காட்ட வேண்டும் .அதாவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் (மைக்ரோ துகானிசம் ,பற்றீரியா ,வைரஸ் ) ஆகியவற்றை உள்ளே விடாது எதிர்த்து போராடும் .இவ்வாறு எதிர்த்து போராடும் நிலைபோன்றே மூச்சி குழாயினுள் நுழையும் தூசி துணிக்கைகளை கூட இது விரைவாக எதிர்த்து போராட விளையும் போது அவ்விடத்தினுள் சுருக்கம் ஏற்படும் ,அவ்விடத்தில் சளி சுரப்பு அதிகம் உண்டாகும் ,வீக்கம் அவ்விடத்தில் உண்டாகும். இவ்வாறு மூச்சி குழாய் சிறிய குழந்தைகளின் விரல் அளவில் இருக்கும். இந்தநிலையில் மூச்சு எடுக்க கஷ்டமாக இருக்கும்.
அதிகாலை , இரவு வேளைகளில் ஒருவருக்கு இந்த நோய் நிலைமை அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது .