தோப்புக்கரணம் செய்வதால் இத்தனை நன்மை உள்ளதா அத்தகைய தோப்புக்கரணத்தின் தோற்றுவாய்
சமணம், விநாயகர் என்ற ஆய்வுக்கெல்லாம் செல்லாமல் நாம் பார்க்கப்போகும் விடயம் பொதுவில் ஆதிகாலம் தொட்டே தோப்புக்கரணம் என்பது நம் ஆதி மக்களால் கடை பிடிக்கப்பட்ட ஒன்றாகும்.
அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ குணம் நிறைந்த தோப்புக்கரணம் 48 ஆண்டுகள். முன்பிருந்த பாடசாலைகளில் குற்றம் செய்யும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
தோப்புக்கரணம் போடுவது என்பது ஒரு கலை ஆகும். அத்தகைய தோப்புக்கரணத்தை போடும் சில முக்கிய விடயங்களை அவதானிக்க வேண்டும்.
அவதானிக்க வேண்டிய விடயங்கள்.
- சுத்தமான சமதளமாக உள்ள இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.
- ஆடை தளர்வாக இருத்தல் அவசியம்.
- இரு கால்களும் உடலின் அகலத்திற்கு வைத்தல் வேண்டும்.
- முழங்காலை நன்கு மடித்து உட்கார்ந்து ஏழ வேண்டும்.
- இப்பயிற்சியை 5,7,9 நீடித்து 21 முறை என பழகியதும் செய்யலாம்.
நன்மைகள்
- 70% அதிகமான உள்ளிழுக்கும் பிராணவாயு மூளைக்கு சென்று மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கின்றது.
- நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அதிகரிக்கின்றது.
- குழந்தைகள் இதனை செய்வதனால் கல்வி,கேள்வி,அறிவுச் செல்வம் அதிகரிக்கின்றது.
இப்போது தோப்புக்கரணம் செய்வதன் பயனை அறிந்தோம் அல்லவா எனவே நாமும் தொடர்ச்சியாக செய்து பயன் பெறுவோம் .