இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருக்கு எதிர்வரும் ஜூலை இரண்டாம் வாரமளவில் குழந்தை கிடைக்க இருப்பதால், பிரித்தானிய மக்கள் மட்டுமன்றி உலகில் உள்ள பல நாடுகளில் இருந்தும் ஆர்வலர்கள் லண்டன் நோக்கி வரத் தொடங்கியுள்ளார்கள்.
லண்டனில் கோடைகாலமென்பதால் அதிகளவான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. லண்டனில் உள்ள ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. தமது விருந்தினர்களைக் கவருவதற்காக சிறப்பான அலங்காரங்களை ஹோட்டல்கள் பின்பற்றுகின்றன.
பிரித்தானியா அரண்மனையின் புதிய வாரிசு ஜூலை 12ம் 13ம் திகதிகளில் பிறக்க இருக்கின்றது.
லண்டன் ஹோட்டல்களின் சில புகைப்படங்களை இங்கே காணலாம்..