2
லண்டன் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 6 வருடங்களாக தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலிடமிருந்து சுமார் அரை மில்லியனுக்கும் கூடுதலான பெறுமதிமிக்க நகைகள் கென்ட் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
நகைகளை திருட்டுக்கொடுத்தவர்கள் கென்ட் பொலிஸ் நிலையத்துடன் 101 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு குற்றப் புலனாய்வு அதிகாரி ஸ்டிவொர்ட் ஐ அணுகி உங்கள் நகைகளை மீட்டுக்கொள்ளமுடியும்.
கென்ட் பொலிசாரின் இத்தகைய செயலானது லண்டன் வாழ் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.