செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “வாழும் போது வாழ்த்துவோம்” – பல்துறை சாதனையாளர்களுக்கு லண்டனில் விருது வழங்கப்படுகின்றது.“வாழும் போது வாழ்த்துவோம்” – பல்துறை சாதனையாளர்களுக்கு லண்டனில் விருது வழங்கப்படுகின்றது.

“வாழும் போது வாழ்த்துவோம்” – பல்துறை சாதனையாளர்களுக்கு லண்டனில் விருது வழங்கப்படுகின்றது.“வாழும் போது வாழ்த்துவோம்” – பல்துறை சாதனையாளர்களுக்கு லண்டனில் விருது வழங்கப்படுகின்றது.

1 minutes read

மாட்சிமை தங்கிய எலிஸபெத் மகாராணி பற்றிய தமிழ் புத்தக வெளியீடு இன்று 27.07.2013 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு தெற்கு லண்டனில் விமர்சையாக நடைபெறவுள்ளது. தமிழினி குலேந்திரன் எழுதிய இவ் நூல் எலிசபெத் மகாராணி பற்றி தமிழில் முதன் முதலில் வெளிவரவுள்ளது.

இவ் நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு அம்சமாக பல்துறைகளிலும் சிறப்புற பணியாற்றிய சாதனையாளர்களுக்கு தமிழினி குலேந்திரனின் “வாழும் போது வாழ்த்துவோம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

விருது பெறுவோர் விபரம்:

வாழ் நாள் சாதனையாளர் விருது                       : பேராசிரியர் கோபன் மகாதேவா

சிறந்த தமிழ் ஊடகத்துறைக்கான விருது       : கலாநிதி பொன் பாலசுந்தரம்

சிறந்த நூல்தேட்டம் விருது                                    : திரு நடராஜா செல்வராஜா

முத்தமிழ் வித்தகர் விருது                                      : திரு கோவிலூர் செல்வராஜன்

சிறந்த ஒலிபரப்பாளர் விருது                                : திரு கந்தசாமி குணாளன்

சிறந்த நாவலாசிரியர் விருது                               : திரு இரா உதயணன்

சிறந்த வாத்தியவித்துவான் விருது                : திரு முத்தையா குருநாதன்

சிறந்த தொலைக்காட்சி நடிகர் விருது            : திரு வல்வைத்தேவன்

சிறந்த விகடகவி விருது                                        : திரு ஆனந்த் நடராஜா

சிறந்த தமிழ்ச் சேவை விருது                              : திரு ஜோசப் வில்வராஜா

சிறந்த இளம் நடன ஆசிரியை விருது            : திருமதி ஷர்மினி கண்ணன்

சிறந்த இலக்கிய விருது                                          : திரு முல்லை அமுதன்

சிறந்த கல்வி சாதனையாளர் விருது             : செல்வன் குமாரலிங்கம் நிவேதன்

சிறந்த இயல், இசை விருது                                 : செல்வி அருந்ததி சண்முகபாலன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More