செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நவிபிள்ளை இலங்கை பயணம் குறித்து விசனத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு | இலங்கை நிராகரிப்பு நவிபிள்ளை இலங்கை பயணம் குறித்து விசனத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு | இலங்கை நிராகரிப்பு

நவிபிள்ளை இலங்கை பயணம் குறித்து விசனத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு | இலங்கை நிராகரிப்பு நவிபிள்ளை இலங்கை பயணம் குறித்து விசனத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு | இலங்கை நிராகரிப்பு

1 minutes read

ஓகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவி பிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது நேரடியான சாட்சிகள் மூலம் விசாரித்து அறிந்ததையும், பார்த்ததையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும் அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில் கடுமையான விசனம் தெரிந்ததாக அவதானிகள் கூறுகின்றனர். உலகின் அனைத்து நாடுகளும் ஆவலுடன் நவி அம்மையாரின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த போதும் வழமைபோல இலங்கை அரசு மறுத்துள்ளது. ஆயினும் இலங்கை அரசுக்கு சிறு கலக்கத்தை கொடுத்துள்ளது எனலாம்.

போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள்,இராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் செனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.

அறிக்கையின் முழு வடிவத்துக்கு இங்கே அழுத்தவும்…

UN Human Rights – Navi Pillai’s Report

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More