பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த இலங்கைத்தமிழ் பெண் உமா குமரன் எதிர்வரும் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழில்கட்சி சார்பாக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் நடைபெற்ற உள்ளகத் தெரிவில் லண்டன் Harrow East பகுதியில் வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் தொழில்கட்சியுடன் இணைந்து இவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் Harrow பகுதியின் வளர்ச்சிக்கு இவர் வழங்கிய சேவைக்காகவும் உமா குமரனை தெரிவு செய்ததாக தொழில் கட்சி அறிவித்துள்ளது,
பிரித்தானியாவில் முதன்முதல் ஈழத்தமிழ் பெண் ஒருவர் பொதுத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழர்களது பெருமளவான வாக்குகளை கொண்ட Harrow East பகுதியில் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் ஒரு ஆசனத்தை பெற முடியுமென தொழில் கட்சி நம்புவதாக அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் அவலநிலை தொடர்பாக புலம்பெயர் தமிழர் பல்வேறு போராட்ட வடிவங்களை முன்னெடுத்துவரும் இவ் வேளையில் உமா குமரன் வெற்றியீட்டினால் பாராளுமன்றத்துக்கும் பிரித்தானிய தமிழர் சமூகத்துக்கும் இடையே காத்திரமான பாலமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Uma Kumaran –
· Born in London. Raised in Harrow and still lives there.
· Educated at Harrow’s local state schools – Newton Farm infant & Primary, Bentley Wood Girls School and St Dominic’s Sixth Form.
· Awarded Bachelor or Arts (BA) in Politics, Master of Science (MSc) in Public Policy by Queen Mary University of London
· Worked for the NHS, supporting 66 trusts in England. Since then she has worked as a caseworker, for a Minister and as a policy researcher and now works at the London Borough of Islington.
· School Governor at a local school in Harrow
· Volunteer radio presenter and producer for Northwick Park Hospital.
லண்டன் Harrow பகுதியில் உமா குமரனால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமுக நலன் சார்ந்த நடவடிக்கைகளால் வேற்றின மக்களின் ஆதரவினையும் பெற்றுள்ளார். இப்பகுதியில் அமைந்துள்ள நோர்த்வீக் பார்க் வைத்தியசாலையின் வானொலி சேவையிலும் தொண்டு அடிப்படையிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். இவரது பெற்றோர்கள் 30 வருடங்களின் முன்னர் இலங்கையின் வடபகுதியில் இருந்து உள்ளநாட்டு போர் காரணமாக லண்டன் Harrow பகுதியில் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.