செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகின் கவனத்தை திருப்பிய அமெ­ரிக்க இசைக்­க­லை­ஞர்கள் | புலிக்கொடியுடன் மேடையில் தோன்றினர் உலகின் கவனத்தை திருப்பிய அமெ­ரிக்க இசைக்­க­லை­ஞர்கள் | புலிக்கொடியுடன் மேடையில் தோன்றினர்

உலகின் கவனத்தை திருப்பிய அமெ­ரிக்க இசைக்­க­லை­ஞர்கள் | புலிக்கொடியுடன் மேடையில் தோன்றினர் உலகின் கவனத்தை திருப்பிய அமெ­ரிக்க இசைக்­க­லை­ஞர்கள் | புலிக்கொடியுடன் மேடையில் தோன்றினர்

1 minutes read

அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள சிட்னி நகரில் நடை­பெற்ற கலை நிகழ்­வொன்­றின்­போது அமெ­ரிக்­காவை தள மாகக் கொண்ட பிர­பல இசைக் கலை­ஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் கொடியை அப்­ப­டியும் இப்­ப­டி­யு­மாக அசைத்துக்காட்டியும், போரா­ளி­களை ஆத­ரித்துப் பேசியும் பெரும் சர்ச்­சையை உரு­வாக்­கி­யுள்­ள­தாக கொழும்பை தள மாகக் கொண்ட ஆங்­கில இணை­யத்­த­ள­மொன்று தெரி வித்­துள்­ளது.

போர்க்­கு­ணம்­மிக்க சமூக நீதி மற்றும் அனைத்தும் ஆபி­ரிக்­கத்­துவம் ஆகிய இரண்­டையும் கருத்­தூன்றி வெளிப்­ப­டுத்தும் சமூ­கம்சார் இசைக் காவி­யங்­க­ளுடன் எதி­ரெ­திரே பாடும் தங்கள் பாடல் நடைக்கு பெயர்­பெற்­றுள்ள “டெட்­பிரெஸ்” எனும் பிர­பல அமெ­ரிக்க பின்­புல இசைக்­கு­ழுவின் கலை­ஞர்­களே இவ்­வாறு சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளனர்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்­­னியில் புது­வ­ரு­ட­தின கொண்­டாட்ட கலை நிகழ்­வொன்று நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது, அவர்­களில் ஒருவர் தனது உடலை தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் கொடியால் போர்த்­தி­யி­ருந்த அதே­ச­மயம் அவர்­க­ளி­ரு­வரும் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் வீர­ப்பி­ர­தா­பங்­களை புகழ்ந்து பேச ஆரம்­பித்­தனர். அதன்­பின்னர், தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும், இலங்­கைக்கும் தைரி­ய­மூட்டும் வகையில் பார்­வை­யா­ளர்­களை கர­கோஷம் செய்­யு­மாறு அவர்­களில் ஒருவர் கேட்­ட­துடன், அதன்­பின்னர் அவர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ர­வாக கருத்து வெளி­யிட்டார். அத­னை­ய­டுத்து, இலங்­கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் இடம்­பெற்­றி­ருந்த இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவிப் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டமை குறித்து உரை­யாற்­றிய அவர், தமி­ழீழ விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்ட போதிலும் விடு­த­லைக்­கான போராட்டம் தொட­ரு­மெனவும் குறிப்­பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More