செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் லண்டனில் இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு லண்டனில் இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு

லண்டனில் இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு லண்டனில் இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு

1 minutes read

இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு கணவர் சக்திவேல் வாகேஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது மூவருடைய சடலங்களை கண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close  பகுதிக்கு சென்ற பொலிசாரே இந்த சடலங்களை மீட்டுள்ளனர்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த பொலிசார், இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

படங்கள் – நன்றி Dailymail

 

a3

a2

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More