செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 24 வருடங்களின் பின்னர் புலிகளின் சிறுவர் போராளியாக கைதானவருக்கு மரண தண்டனை 24 வருடங்களின் பின்னர் புலிகளின் சிறுவர் போராளியாக கைதானவருக்கு மரண தண்டனை

24 வருடங்களின் பின்னர் புலிகளின் சிறுவர் போராளியாக கைதானவருக்கு மரண தண்டனை 24 வருடங்களின் பின்னர் புலிகளின் சிறுவர் போராளியாக கைதானவருக்கு மரண தண்டனை

1 minutes read

Judge holding gavel, close-up

புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்கு 24 வருடங்களின் பின்னர் நேற்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தெரியவருவதாவது 1990 ஆம் ஆண்டில் திருகோணமலை கடற்பரப்பில் ஆறு பொதுமக்களை புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சீனன் குடா கடற்படை தளத்தினை அண்மித்த பகுதியில் 14 வயதாக இருக்கும் போது அவர் சிறைப்பிடிக்கப்பட்டு சுமார் 14 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிஷரூபிக்கப்படாத நிலையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடும் படியும் பணிக்கப்பட்டுமிருந்தார்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்த போதே அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்த திருகோணமலை மேல்நீதிமன்றம் அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர் பிணையில் விடுவிக்கப்பட்ட காலத்தில் திருமணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More