பிரான்சில் நடைபெற்ற மொபைல் குறும்பட போட்டியில் சதாபிரணவனின் “God is Dead” குறும்படம் அதிக மக்கள் விருப்பு வாக்குளை பெற்று “மக்கள் தெரிவு விருதை” பெற்றுக்கொண்டது.
இலங்கையில் இடம்பெற்ற போரின் தாக்கத்தை கூறும் இப்படம் 27,237 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழரின் இன்றைய நிலையை மிகக் கச்சிதமாக “God is Dead” குறும்படம் கூறுகின்றது.
சுமார் 800 குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டபோதிலும் 50 படங்கள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று பிரான்ஸில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் God is Dead குறும்பட குழுவினரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இயக்குனர் சதாபிரணவனிடம் ஆச்சரியத்துடன் பேசிய நடுவர்கள், இவரது படங்களில் யுத்தத்தின் வடுக்கள் பற்றி பேசப்படுவது பற்றி கேட்டுள்ளார்கள். அதற்கு மிகவும் இயல்பாக “நாங்கள் போரின் கொடுமையை அனுபவிக்கும் இலங்கையில் இருந்து வந்த ஈழத்தமிழர்” என பதிலளித்துள்ளார்.
தற்போது பிரான்சில் இருக்கும் இயக்குனர் சதாபிரணவனை வணக்கம் லண்டன் இணையம் தொடர்புகொண்டு “மக்கள் தெரிவு விருது” பற்றிக் கேட்டபோது, “விருது கிடைத்தது மகிழ்ச்சி மற்றும் எமக்குக்கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் எமது அவலத்தின் ஒரு முகத்தை உலகுக்கு காட்ட முடிந்தமையே அதிக திருப்தி தருகிறது” என பதிலளித்தார். அவரது குரலில் பெருமிதம் நிறைந்து இருந்தது.
இயக்குனர் சதாபிரணவனுக்கும் அவரது குழுவினருக்கும் வணக்கம் லண்டன் இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
படப்பிடிப்பின் போது ;
படத்தை பார்வையிட ;
http://fr.mobilefilmfestival.com/video/god-is-dead740
முன்னைய தொடர்பான செய்திகள் ;
http://www.vanakkamlondon.com/mn-030214-3/
http://www.vanakkamlondon.com/god-is-dead-260114/