கொழும்பு வனாத்தமுல்லை பிரதேசத்தில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை பேஸ்லைன் வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது தண்ணீர் போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊ என்று சத்தமிட்டனர். இதனையடுத்து துமிந்த சில்வா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் நபர் அவரது வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய சிலர், அவரை கடத்திச் சென்றதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பேஸ்லைன் வீதிக்கு வந்த பிரதேசவாசிகள், வீதியை குறுக்காக மறித்து வீதியை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போதே துமிந்த சில்வா மீது தண்ணீர் போத்தல் ஒன்று தூக்கி வீசப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊ என்று சத்தம் இட்டனர்.
எனினும் பொலிஸார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர் பாதாள உலக குழுவுடன் சம்பந்தப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் கடத்தப்பட்டதாக கூறப்பட்டும் சமரதீர சுனில் என்பவர் மீண்டும் அந்த இடத்திற்கு திரும்பினார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகிழ்ச்சி கோஷம்