செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சட்டவிரோத செயல்களைத்தடுத்தல் | ஐ.நா வும் இலங்கையும் இணைகிறதுசட்டவிரோத செயல்களைத்தடுத்தல் | ஐ.நா வும் இலங்கையும் இணைகிறது

சட்டவிரோத செயல்களைத்தடுத்தல் | ஐ.நா வும் இலங்கையும் இணைகிறதுசட்டவிரோத செயல்களைத்தடுத்தல் | ஐ.நா வும் இலங்கையும் இணைகிறது

1 minutes read

உலக நாடுகளின் உள்ள கடல் மார்க்கமாக போதைப்பொருள்களை இலங்கைக்குள் கடத்துதல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதலை தடுத்தல் சம்பந்தமாக சர்வதேச மட்டத்தில் இலங்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஜக்கிய நாடுகளின் கீழ் உள்ள கடலோர பாதுகாப்பு மற்றும் வன்செயல்களை தடுத்தல் சம்பந்தமான பணிப்பாளர் ரொப் மெக்லைனிடம் பேச்சுவார்த்தையொன்று நேற்று பத்தரமுல்லையில் உள்ள பொலிஸ் சட்டம் மறுசீரமைப்பு சம்பந்தமான புதிய அமைச்சில் இடம்பெற்றது.

பிரித்தானிய ரோயல் கடற்படையின் முன்னாள் தளபதியும் தற்பொழுது சீசல் நாட்டில் உள்ள யு.என் உலக நாடுகளின் கடற்பாதுகாபப்பு வன்முறை சம்பந்தமான யு.என் ஓ.டி சி யின் சிரேஸ்ட பணிப்பாளருமான ரொப் மெக்லைன் கடந்த வாரம் இலங்கை வந்திருந்தார்.

அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நீதி அமைச்சர் மற்றும் ரானுவம் கடற்படைத் தளபதி பொலிஸ் நிர்வாகம் சம்பநதமான சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரையும் கண்டு மேற்படி விடயமாக பேச்சுவார்த்தை நடாத்தினார். இச் சந்திப்பு சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி ஊடகங்களுக்கு தகவல் தருகையில் –

இலங்கையில் அண்மைக்காலமாக கடல் மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் போதைப்பொருள் கடத்துதல் அல்லது பாவணை பெருமளவில் பெருகியுள்ளது. மேற்படி விடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் விசேட கூட்டத்தில் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துதல் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வியாபாரிகள், கடத்துபவர்கள், இத் தொழில் ஈடுபடுவோர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு பாரிய அளவிலான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியான ஒரு பிரிவும் இயங்க உள்ளது. அத்துடன் கடற்படை இராணுவமும் இதில் கூட்டாக செயல்படும்.

அத்துடன் கடலோர பாதுகாப்பு உலகலாவிய ரீதியில் கண்காணிக்கப்பட்டு ஒரு கூட்டு முறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More