இத்தாலி அரசு இந்தியாவிற்கான தூதரை திரும்பப்பெற்றுள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு மிகவும் மெதுவாக நடத்தப்படுகிறது. இது இரு நாட்டு உறவுகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த தாமதத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது. மேலும் இந்தியாவிற்கான இத்தாலி தூதர் டேனியல் மான்சினியை திரும்ப பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இந்தியாவிற்கான இத்தாலிய தூதர், டேனியல் மான்சினி உடனடியாக இத்தாலி திரும்புகிறார்..
கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள மாநில எல்லையில் வந்து கொண்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரள மீனவர்கள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர்.
இந்த வழக்கில் இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலானோ ரத்தோர், சல்வதோர் ஜிரோன் ஆகிய இரண்டு வீரர்களை கேரள போலீஸ் கைது செய்தனர். . தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள வீரர்கள் இருவரும் தில்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.