0
கம்பஹா – பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு ஆசிரியர்களும் மாணவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
13ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவரும் இடமாற்றம் பெற்றுச் சென்ற இரண்டு ஆசிரியர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று கம்பஹா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.