பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடி இந்திய பிரமரானால் உலக வரைப்படத்தில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பீதர் பாராளுமன்ற தொகுதியில் நேற்று பாரதிய ஜனதா வேட்பாளர் பகவ்ந்த்கூபாவை ஆதரித்து பேசிய ஈஸ்வரப்பா.
இந்தியாவிடம் அடிக்கடி வாலாட்டி கொண்டிருக்கும் பாகிஸ்தான், மோடி பிரதமர் ஆனவுடன் உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படும் சூழ்நிலை வரும். பாகிஸ்தானை இல்லாமல் செய்துவிடும் வலிமை மோடி ஒருவருக்கே உண்டு என்று ஆவேசமாக பேசினார்.
கர்நாடகத்தில் மிகவும் மட்டமான ஆட்சியை நடத்திவரும் முதல்வர் சித்தராமையா, ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கு உருப்படியாக எந்த நன்மையையும் செய்யமாட்டார். அவரை இனியும் கர்நாடக மக்கள் நம்பி ஏமாற தயாராக இல்லை. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று அவர் மேலும் பேசினார்.