சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்காக 21 இளைஞர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு தொழில்வாய்ப்புக்காக மாரு என்ற இளைஞனை அழைத்து வரப்பட்டு இங்கு வைத்து அவரது சிறுநீகரத்தை அகற்றும் போது அவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் சிறுநீரக விற்பனை தொடர்பில் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் மூன்று பேரும் ஹைதராபாத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது சிறுநீரக விற்பனையின் நிமித்தம் 21 இளைஞர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விற்பனையின் போது ஒரு சிறுநீரகத்துக்கு 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3