தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி, உ.பி., பீகார், ராஜஸ்தான், அசாம், மகாராஷ்ட்டிரா, ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், காஷ்மீர் என மொத்தம் 117 தொகுதிகளில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை ( 24 ம்தேதி வியாழக்கிழமை) 7 மணிக்கு துவங்கியது. காலை 11 மணிநிலவரப்படி 35 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியது. தர்மபுரி , நாகை, கிருஷ்ணகிரி, ஈரோடு தொகுதிகளில் ஓட்டுப்பதிவு படு வேகமாக நடந்து வருகிறது. நாகை மீனவ பகுதிகளில் 60 சதவீதத்திற்கும் மேலாக ஓட்டுக்கள் பதிவாகியது. தமிழகத்தில் மாலைக்குள் 70 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10
மொத்தம் 9 கட்டங்களாக நடக்கும் தேர்லில் இன்று நடக்கவிருப்பது 6ம் கட்டம் ஆகும். தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையாற்றினர். மக்கள் ஆர்வமாக ஓட்டு போட்டு வருகின்றனர். சென்னையில் நடிகர்கள் ரஜினி, கமல், கவுதமி, அஜீத், ஷாலினி , பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் தங்களின் ஓட்டுக்களை அவரவர் ஓட்டு சாவடிகளில் போட்டனர்.