ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜந்தர் மந்தரில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய ம.தி.மு.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணி அளவில் ஜந்தர் மந்திரில் வைகோ தனது ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார்.
இதில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினர் வக்கீல் தேவதாஸ், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன், ம.தி.மு.க. இணைய தள ஒருங்கிணைப்பானர் மின்னல் முகமது அலி உள்பட ம.தி.மு.க. தொண்டர்கள், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் பலர் கறுப்பக்கொடியுடன் கலந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி, மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சவை அழைத்ததை கண்டிக்கிறோம்.
எரிகிறது எரிகிறது தமிழர் நெஞ்சம் எரிகிறது போன்ற 30 கோஷங்களை அவர்கள் முழங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.