1
கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
களுத்துறை – மருதானைக்கிடையில் பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் இருந்து குதித்த மாணவி படு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவி கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் ரயிலிலிருந்து குதித்துள்ளதாக ரயில் சாரதி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.