இந்தியாவில் வாரிசு அரசியல் நடைபெறுவதை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று பாஜக கூறியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி ஷங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, வாரிசு அரசியல், வழிவழியாக அரசியல் நடத்துவது போன்றவற்றை இந்திய மக்கள் நிராகரித்துவிட்டனர். அதே சமயம், அரசியலில் கடின உழைப்பு, அரசியலில் தன்னார்வம், அரசியலில் சாதனை, அரசியலில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை தேர்வு செய்து அதனை பிரதிபலிக்கும் நபராக மோடியை பார்த்துள்ளனர் என்று கூறினார்.
முன்னிலை நிலவரத்தை பார்க்கும் போது பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.