4
நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கையொன்றின் ஒரு பகுதி உடைந்ததையடுத்து பயணிகள் பெரும் திகிலுக்குள்ளான பரபரப்புச் சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
லண்டனின் சிற்றி விமான நிலையத்திலிருந்து புளோரன்ஸ் நகருக்கு பறந்த சிற்றி ஜெட் விமானத்தின் இறக்கையொன்றின் பகுதியே இவ்வாறு சேதமடைந்துள்ளது.
அந்த விமானம் தேம்ஸ் எஸ்வெரி பிராந்தியத்துக்கு மேலாக வானில் வட்டமிட்டதையடுத்து மீளவும் சிற்றி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து பயணிகள் வேறோரு விமானத்தின் மூலம் புளோரன்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அவர்களது பயணம் 5 மணி நேர தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.