2
இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லினை அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரண்டாம் சுற்று இரகசிய வாக்கெடுப்பொன்றில் றிவ்லின் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மெயிர் ஷீட்ரித்தை 53 வாக்குகளுக்கு 63 வாக்குகளால் தோற்கடித்துள்ளார்.
ஏற்கனவே 7 வருட காலம் ஜனாதிபதியாக பதவி வகித்த ஷிமொன் பெரெஸின் (90 வயது) பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் முடிவடைவதையொட்டியே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இஸ்ரேலிய ஜனாதிபதி பதவியானது பெருமளவில் வைபவரீதியான ஒன்றாக உள்ளது.
பலஸ்தீனர்களுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதிக்கு முக்கிய வகிபாகம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
.
பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான் யாஹுவின் வலது சாரி லிகுட் கட்சியின் உறுப்பினரான றிவ்லின் இஸ்ரேலின் 10 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
புதிய ஜனாதிபதியாக தெரிவு சொய்யப்பட்டதையடுத்து றிவ்லின் உரையாற்றுகையில், ”இந்த தருணத்திலிருந்து நான் எந்தவொரு கட்சிக்கும் உடைமையானவன் அல்லன்.
நான் அனைவருக்கும் உடைமையானவன். நான் இந்த நாட்டிற்குரியவன்” என்று கூறினார்.