இங்கிலாந்து இளவரசி, கேட் மிடில்டன், கர்ப்பம் தரித்துள்ளதாகவும், அவர் இரட்டை பெண் குழந்தைகள் கருவை சுமந்துள்ளதாகவும், அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி,இரண்டாம் எலிசபெத்தின் மகன் சார்லஸ்- மறைந்த டயானாவின் மகன், வில்லியம். இவர், தன் பள்ளித் தோழியான, கேட் மிடில்டனை மணந்துள்ளார். இந்த தம்பதிக்கு, ஜார்ஜ் என்ற பெயரில், 11 மாத ஆண் குழந்தை உள்ளது.
உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதும், மன்னர் கால விளையாட்டுகளை விளையாடுவதுமே தன் முழு நேர பொழுது போக்காக கொண்டுள்ள வில்லியம் மனைவி கேட், இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார் என, அமெரிக்காவின், ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், கேட் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உடல்நலப் பரிசோதனையில், அவர் கர்ப்பம் தரித்துள்ளதும், இரட்டை பெண் குழந்தைகளை அவர் கருவில் சுமப்பதும் உறுதியாகி உள்ளதாக, அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், இளவரசி கேட்டுக்கு, பெண் குழந்தை என்றால் மிகவும் இஷ்டம்; இரட்டை பெண் குழந்தைகளை பெற உள்ள அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார் என, அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.