மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இங்கு ராணுவத்தில் சிறுவர்கள் (குழந்தைகள்) தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஐ.நா. கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தது.
அதை தொடர்ந்து தற்போது மியான்மர் ராணுவம் 91 சிறுவர்களை விடுதலை செய்துள்ளது. இதுவரை 364 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் ராணுவம் ஊசலாட்டத்தில் உள்ளது. ராணுவத்தில் சிறுவர்கள் சேர்ப்பதை மியான்மர் நிறுத்த வேண்டும் என யுனிசெப் நிறுவன பிரதிநிதி ஷாலினி பகு குணா கூறியுள்ளார்.