செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு |சொத்து குவிப்பு வழக்கில் செப்.20-ஆம் தேதி இறுதி தீர்ப்பு: ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு |சொத்து குவிப்பு வழக்கில் செப்.20-ஆம் தேதி இறுதி தீர்ப்பு:

ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு |சொத்து குவிப்பு வழக்கில் செப்.20-ஆம் தேதி இறுதி தீர்ப்பு: ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு |சொத்து குவிப்பு வழக்கில் செப்.20-ஆம் தேதி இறுதி தீர்ப்பு:

1 minutes read

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் செப்.20-ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்று ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுகாதகரன், இளவரசி மீதான் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர் குமார் வாதிடுகையில், எனது கட்சிகாரர் மீது தேவையில்லாமல் முந்தைய அரசு காழ்ப்புணர்ச்சியால் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிகாரிகளின் துணையுடன் சொத்துகளின் மதிப்பை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. எனது கட்சிகாரரின் மதிப்பையும், கெüரவத்தையும் குறைப்பதற்காக வேண்டுமென்றே முந்தைய அரசு திட்டமிட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

இதனை மறுத்து அரசு வழக்குரைஞரின் உதவியாளர் முருகேஷ் மராடி, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், சொத்துகள் மீதான உரிய மதிப்பு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுவருக்கு கிடைத்த விருதுகளில் ஒரு சிலதிற்கு மட்டும் மதிப்பு போடப்பட்டுள்ளது, மற்றவற்றிற்கு எந்த மதிப்பும் போடவில்லை.

வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு அரங்கததை அமைப்பதற்காக திரைப்பட கலை இயக்குனர் தோட்டாதரணிக்கு முதல் குற்றவாளியே தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். திருமணச் செலவின் மதிப்பீட்டிலும் தவறு எந்த தவறும் இல்லை.எனவே சொத்து குவிப்பு வழக்கில் சொத்துக்களின் உண்மையான மதிப்பீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் நடைபெறவில்லை என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கில் இறுதி தீர்ப்பை செப்.20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்று நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் ஆஜர் ஆக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More