உலகின் மிக மோசமான ஊழல்வாதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்று தாஹிர் உல் ஹத்ரி குற்றம்சாட்டியுள்ளார். இஸ்லாமாபாத்தில் போராட்டக்காரர்களிடையே உரையாற்றிய தாஹிர் உல் ஹத்ரி குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் பணத்தை 15 நாடுகளில் நவாஸ் ஷெரீப் முதலீடு செய்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளார். ஊழல் அதிகரிப்பால் நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் நவாஸ் ஷெரீப் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் தாஹிர் உல் ஹத்ரி கூறினார். நவாஸ் ஷெரீப் விலகும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.