2
குறைந்த தூரம் பறந்து தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா இன்று சோதித்து பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘220 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது,’ என்றனர். கடந்த மூன்று வாரங்களுக்கு முன், போப் பிரான்சில் சியோல் வந்தபோது, வடகொரியா சக்திவாய்ந்த ஐந்து குறைந்த தூரம் பறந்து தாக்கும் ஏவுகணைகளின் சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.