கடந்த 2013ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து நவாஸ் ஷெரீப் ஆட்சிக்கு வந்தார் என கூறி இம்ரான்கான் தலைமையில் எதிர்கட்சிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்றும் கோரி உள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ‘கடந்த 2013ம் ஆண்டு தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நியாயமாக நடந்த தேர்தல் மூலம் தான் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார் என்ற அமெரிக்காவின் முந்தைய கருத்தில் எந்த மாற்றமும் இப்போது இல்லை.’ என்றார்.
2