0
டெங்கு நோய்க்கு காரணமாக பாக்டீரியாக்களை தடுக்கும் புதிய வகை கொசுவை பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொசுவைக் கொண்டு டெங்குவை தடுக்கும் சோதனை ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவிலும் நடத்தப்பட்டுள்ளது. வோல்பாசியா என்ற பாக்டீரியாவை கொண்ட கொசுவின் உற்பத்தியை பெருக்கி அதன் மூலம் மனிதர்களில் டெங்கு பரவுவதை தடக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.