செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸின் மகன் கழுத்து அறுக்கப்படும்- ஐஎஸ்ஐஎஸ் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸின் மகன் கழுத்து அறுக்கப்படும்- ஐஎஸ்ஐஎஸ்

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸின் மகன் கழுத்து அறுக்கப்படும்- ஐஎஸ்ஐஎஸ் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸின் மகன் கழுத்து அறுக்கப்படும்- ஐஎஸ்ஐஎஸ்

1 minutes read

சிரியாவிலும், ஈராக்கிலும் ஒரு இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற முனைப்புடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. உள்ளூர் அரசாங்கங்களினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இவர்களின் நடவடிக்கை இருக்க வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பிற நாடுகளின் உதவியுடன் இந்தப் போராளிகள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அரபு கூட்டணி நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா போராளிகள் மீதான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த எட்டு விமானிகள் கலந்து கொண்டனர். இவர்களில் பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸின் மகனும் ஒருவராவார். தாக்குதல் முடித்துத் திரும்பியுள்ள இவர்கள் தங்களின் போர் விமானங்கள் முன்னால் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று இணையதளத்தில் வெளிவந்துள்ளன.

இவர்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் டஜனுக்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போராளிகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் தேடப்பட்டு வருகின்றனர். விரைவிலேயே இவர்களின் கழுத்து அறுக்கப்படும் என்ற எச்சரிக்கை செய்தி ஒன்று இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

ஆனால் இவர்கள் தங்களின் கடமையைத் திறம்பட செய்தனர் என்று சில பயனாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சவுதி இளவரசர் சல்மானும் தங்கள் மதம் மற்றும் தாயகத்திற்கான கடமைகளைத் தங்களின் விமானிகள் நிறைவேற்றியுள்ளனர் என்று செய்தியாளர்களிடம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More