விழுப்புரம் அருகே உள்ள சிறுவந்தாடு மோட்சக்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் தர்மன், விவசாயி. இவரது மகள் சங்கீதா (வயது 16). இவர் சிறுவந்தாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கீதா மன வருத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை சங்கீதாவின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். 9 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சங்கீதா தனது உடலில் மண்எண்ணையை உற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் கருகியது. குடிசையும் எரிந்து சாம்பலாகியது. சிறிது நேரத்தில் சங்கீதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வளவனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சங்கீதாவின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினார்கள்.
தற்கொலை செய்த மாணவி சங்கீதாவின் அண்ணன் கலியமூர்த்தி, அ.தி.மு.க. கிளை கழக செயலாளராக இருந்து வருகிறார்.