கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொது நூலகத்திற்கு சுமார் 25,000 நூல்களை சேகரித்து வழங்கும் “கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்” எனும் திட்டத்தின் கீழ் முதல் தொகுதி நூல்கள் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிபீப்பிள் அமைப்பு முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தில் Lotus Caring Hands அமைப்புடன் இணைந்து உலகளாவிய ரீதியில் பரப்புரையை முன்னெடுத்துள்ளது. பிரித்தானியா, அவுஸ்த்ரேலிய, கனடா, சுவிஸ் மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து இதுவரை சுமார் 3000 நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 500 நூல்கள் மேற்படி நூலகத்தினை சென்றடைந்துள்ளது.
கிளிபீப்பிள் அமைப்பின் ஒரு குழுவினரிடமிருந்து இத்தொகுதி நூல்களை நூலகர் திருமதி சசிகலா இரவீந்திரராஜா மற்றும் கரைச்சி பிரதேசசபை தலைவர் திரு குகராசா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.